Nov 23, 2026 - 04:15 PM

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனக் குழுமமான Aberdeen Holdings, 2026 ஒக்டோபர் 20 ஆம் திகதி கொழும்பு Shangri-La Ballroom இல் நடைபெற்ற Aberdeen Chairman’s Awards 2026 விருது விழாவில், சிறந்த வர்த்தகச் செயற்திறன், புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய நிறுவனங்களையும் தலைவர்களையும் கௌரவித்தது.
குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்தை வடிவமைத்து வரும் நிறுவனங்களையும் ஊழியர்களையும் கௌரவிக்கும் நோக்கில், குழுமத்தின் அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த தலைமை அதிகாரிகளும் குழுக்களும் இந்நிகழ்வில் ஒன்றுகூடினர். குழுமத்தின் 30 ஆண்டுகால வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்நிகழ்வு, இதுவரையான சாதனைகளையும், எதிர்கால இலட்சியங்களையும், நீடித்த வெற்றிக்குப் பின்னாலுள்ள கூட்டு முயற்சியையும் கொண்டாடியது.
இந்நிகழ்வின் உயரிய நிறுவன விருதான Chairman’s Award for Best Company, Expo Commodities Global (ECG) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. நிதி வலிமை, செயற்பாடுகள், சந்தை அபிவிருத்தி, புத்தாக்கம், நிலைபேறு, ஆளுகை மற்றும் ஊழியர் ஈடுபாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் ECG வெளிப்படுத்திய சிறந்த செயற்திறனை இவ்விருது பிரதிபலிக்கிறது. ஏற்றுமதி விவசாயப் பொருட்கள் துறையில் (Agri-Commodities) வளர்ந்து வரும் பல்தேசிய நிறுவனமான ECG, வாசனைத் திரவியங்கள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகள் (Spices and Allied Products), தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகள் (Coconut and Coconut Related Products), நறுமண எண்ணெய்கள் (Essential Oils) ஆகியவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படும் இந்நிறுவனம், சர்வதேச சந்தையில் தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. ECG இன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, Aberdeen Holdings குழுமத்துக்கு அது வழங்கி வரும் பங்களிப்பு மற்றும் சிறப்பை நோக்கிய அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான அங்கீகாரமாகவும் இவ்விருது அமைந்துள்ளது.
Chairman’s Award for Best Emerging Entity விருது Damn Fine Coffee நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதுடன், Ruhunu Farms நிறுவனம் இரண்டாம் இடத்தை (First Runner-Up) பெற்றுக்கொண்டது. வலுவான முன்னேற்றம், சிறந்த முகாமைத்துவம் மற்றும் நீண்டகால வெற்றிக்கான ஆற்றலை வெளிப்படுத்தும் வர்த்தகங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தரமான கோப்பி வகைகள் மற்றும் புதுமையான கோப்பி தீர்வுகள் ஊடாக இலங்கையின் கோப்பி கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் செயற்படும் Damn Fine Coffee, இத்துறையில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. அதேவேளை, தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியதன் மூலமும், தரம் மற்றும் பொறுப்பான பண்ணை நடைமுறைகள் மீதான அர்ப்பணிப்பின் மூலமும் Ruhunu Farms முட்டை உற்பத்தித் துறையில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இவ்விரு சாதனைகளும், விரிவடைந்து வரும் Aberdeen குழுமத்தின் வர்த்தகங்களிடையே காணப்படும் தொழில்முனைவு உணர்வு, மன உறுதி மற்றும் வளர்ச்சி ஆற்றலைப் பிரதிபலிக்கின்றன.
Expo Commodities Global நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) Fazil Fowzi (பாசில் பவ்சி), தனது தொலைநோக்குடைய தலைமைத்துவம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழங்கிய வியூக ரீதியான பங்களிப்புக்காக Chairman’s Visionary Award விருதினால் கௌரவிக்கப்பட்டார். புதிய வாய்ப்புகளை இனங்கண்டு, நம்பிக்கையை வளர்த்து, தமது தொலைநோக்கைத் தமது நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தக் குழுமத்துக்கும் பயனுள்ள பெறுபேறுகளாக மாற்றும் தலைவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வு குறித்து Aberdeen Holdings தலைவர் Sattar Kassim (சத்தார் காசிம்) கருத்துத் தெரிவிக்கையில்,
“Aberdeen Chairman’s Awards எமது 30 ஆண்டுகாலப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணமாகும். எமது வர்த்தகங்களை நாள்தோறும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் அர்ப்பணிப்பு, துணிவு மற்றும் இலட்சியத்தை இவ்விருதுகள் கௌரவிக்கின்றன. இவ்வாண்டின் சாதனைகளைக் கொண்டாடும் அதேவேளை, மேலும் உயர்ந்த தரம், புதிய வாய்ப்புகள் மற்றும் நாம் அனைவரும் இணைந்து உருவாக்கவுள்ள வெற்றிகளையும் நாம் எதிர்நோக்குகிறோம்” என்றார்.
Aberdeen குழுமத்தின் பலம், அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது. முன்மாதிரியாகத் திகழ்ந்து, சக ஊழியர்களுக்கு உறுதுணையாக இருந்து, தமது அன்றாடப் பணிகளின் ஊடாகக் குழுமத்தின் விழுமியங்களைச் செயலில் வெளிப்படுத்தும் அத்தகைய ஊழியர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
குழுமம் முழுவதும் அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு, இணைந்து செயற்படும் பண்பு, முன்முயற்சி மற்றும் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில், Spirit of Aberdeen மற்றும் Aberdeen Leadership Excellence ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், சிறந்த உற்பத்தி (Production Excellence), சிறந்த சேவை வழங்கல் (Service Delivery Excellence), மனிதவள மேம்பாடு (People Architect), வர்த்தகநாம மேம்பாடு (Brand Catalyst Recognition), சிறந்த வர்த்தக அபிவிருத்தி மற்றும் விற்பனைச் செயற்பாடு (Business Development & Sales Excellence), புத்தாக்கம் (Innovation), நிலைபேறு மற்றும் சமூகப் பங்களிப்பு (Sustainability & Social Impact), டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் (Digitalisation & Transformation), சிறந்த நிதி முகாமைத்துவம் (Financial Excellence) ஆகிய ஒன்பது செயற்திறன் பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்பட்டன. செயற்பாட்டுத் தரத்தை உயர்த்துதல், வர்த்தக வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் நீண்டகாலப் பெறுமதியை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு Aberdeen Holdings குழுமம் முழுவதும் பங்களித்து வரும் குழுக்களும் தனிநபர்களும் இவ்விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டனர்.
நீண்டகாலமாக விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி, குழுமத்தின் வளர்ச்சிப் பயணத்துக்குப் பங்களித்த ஊழியர்கள், Decades of Dedication எனும் சிறப்புப் பகுதியில் கௌரவிக்கப்பட்டனர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன நடுவர் குழுவின் வழிகாட்டலில் நடைபெற்ற Aberdeen Chairman’s Awards, சிறந்த செயற்பாடுகளை நம்பகமான முறையிலும் தெளிவான இலக்குடனும் அங்கீகரிப்பதில் Aberdeen Holdings கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. பல்வேறு துறைகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் குழுமம், சிறப்பாகச் செயற்படும் வர்த்தகங்களை மேலும் வலுப்படுத்துதல், வளர்ச்சி வாய்ப்புள்ள புதிய முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் எதிர்காலத்துக்கான நிலைபேறான பெறுமதியை உருவாக்குதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
































