Nov 23, 2026 - 04:24 PM

அரசாங்க நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 3,000 புதிய வீடுகளை நவம்பர் 23 முதல் 27 வரை நாடளாவிய ரீதியில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வழிநடத்தலில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் "தனக்கென ஓர் இடம் - அழகான வாழ்க்கை" எனும் வீடமைப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் பிரதேசமக்களின் சிரமதானப் பங்களிப்புடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், இவ்வமைச்சினால் மாத்திரம் இவ்வருடத்திற்குள் நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஓர் அங்கமாக, நவம்பர் 23 முதல் 27 வரையான வாரத்திற்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இவ்வாறு 3,000 புதிய வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படுகின்றன.
































