Nov 23, 2026 - 03:45 PM

ஜோன் கீல்ஸ் குழுமம், உலகளாவிய துரித உணவகச் சங்கிலியான Wendy’s® நிறுவனத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துகிறது. இதன் முதல் உணவகம், கொழும்பில் உள்ள One Galle Face வளாகத்தில் திறக்கப்படவுள்ளது. இந்த வருகையின் மூலம், கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக Wendy’s நிறுவனத்தைத் தனித்துவமாகக் காண்பித்து வரும், புத்தம்புதிய மற்றும் ஓர்டரின் பேரில் அப்போதே தயாரிக்கப்படும் உணவுகளையும், சிறப்பான அனுபவத்தையும் இலங்கை நுகர்வோர் பெற முடியும்.
1969ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட Wendy’s, தரம் மற்றும் புத்தம் புதிய மூலப்பொருட்களைக் கொண்டு உணவுகளைத் தயாரிப்பதில் தனது நற்பெயரை நிலைநாட்டியுள்ளது. தரம் என்பதே எங்கள் செய்முறை (Quality Is Our Recipe®) என்ற கொள்கையைப் பின்பற்றும் Wendy’s, உலகம் முழுவதும் 7,000 க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்ட முன்னணி துரித உணவக நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், Wendy’s தனது புகழ்பெற்ற சதுர வடிவ ஹம்பர்கர்கள், உடனுக்குடன் தயாரிக்கப்படும் சிக்கன் சாண்ட்விச்கள், மொறுமொறுப்பான பிரெஞ்சு பிரைஸ் மற்றும் பிரபலமான Frosty® இனிப்பு வகை ஆகியவற்றை இலங்கை நுகர்வோருக்கு வழங்கவுள்ளது. மேலும், “Nai Miris”- Lankan Fire Burger மற்றும் Yellow Rice Bowl போன்ற உள்ளூர் சுவைக்கு ஏற்ற உணவுகளும் இதில் இடம்பெறவுள்ளன.
இந்தத் தொடக்கமானது, Wendy’s நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகநாம வலிமையையும் உணவக அனுபவத்தையும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் இலங்கைச் சந்தை குறித்த ஆழ்ந்த அறிவுடன் இணைத்து, நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. கொழும்பில் தொடங்கும் இந்தக் கூட்டாண்மை, காலப்போக்கில் Wendy’s நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்துவதையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதையும், இலங்கையின் உணவுச் சேவைத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தொடக்கம் குறித்துக் கருத்து தெரிவித்த ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிறிஷான் பாலேந்திரா, “தரத்தின் மீதான சமரசமற்ற அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வர்த்தகநாமத்தை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்த, Wendy’s நிறுவனத்தை இலங்கைக்குக் கொண்டு வருவது ஒரு அற்புதமான வாய்ப்பாகும். Wendy’s நிறுவனத்தின் தனித்துவமான உணவுப் பட்டியலும், வாடிக்கையாளர் அனுபவத்தின் மீதான அதன் கவனமும், எங்கள் தயாரிப்புப் பட்டியலில் இதை ஒரு வலுவான சேர்க்கையாக ஆக்குகின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் உணவகத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அதே வேளையில், காலப்போக்கில் இலங்கையில் Wendy’s நிறுவனத்தின் இருப்பை அதிகரிக்க கணிசமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்," என்றார்.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நுகர்வோர் உணவுப் பொருட்கள் குழுவின் தலைவர் தமிந்த கம்லத் கூறுகையில், “எங்கள் முதல் வாடிக்கையாளர்களை வரவேற்க நாங்கள் தயாராகும் வேளையில், இலங்கை நுகர்வோருடன் ஒரு வலுவான தொடர்பை உருவாக்கும் அதே வேளையில், உலகம் முழுவதும் Wendy’s அறியப்பட்டிருக்கும் தரம், விருந்தோம்பல் மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்குவதில் எங்கள் கவனம் உள்ளது. Wendy’s நிறுவனத்தின் உலகளாவிய தரங்களை, உள்ளூர் சுவைகள் மற்றும் விருப்பங்கள் குறித்த எங்கள் புரிதலுடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து, அவர்களை மீண்டும் மீண்டும் வரவைக்கும் ஒரு அனுபவத்தை உருவாக்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.”
Wendy’s நிறுவனத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்தியங்களுக்கான சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ் கொன்வே கூறுகையில், “இலங்கையில் Wendy’s நிறுவனத்தைத் திறப்பது ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது, மேலும் ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து இந்த அடியை எடுத்து வைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் ஆழ்ந்த உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் இலங்கை நுகர்வோர் குறித்த வலுவான புரிதல், தரம் மற்றும் தனித்துவமான வர்த்தகநாம அனுபவத்திற்கான Wendy’s நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன் இணைந்து, தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஒரு வலுவான அத்திவாரத்தை வழங்குகிறது. Wendy’s நிறுவனத்தைத் தனித்துவமாக்கும் புத்தம் புதிய, ஆர்டர் செய்து உடனுக்குடன் தயாரிக்கப்படும் உணவு மற்றும் விருந்தோம்பலை இலங்கை நுகர்வோருக்கு அறிமுகப்படுத்த இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.”
கொழும்பின் முன்னணி வணிக மற்றும் வாழ்க்கைமுறை மையங்களில் ஒன்றான One Galle Face வளாகத்தில், முதலாவது Wendy’s உணவகம் திறக்கப்படவுள்ளது. இந்தத் தொடக்கம், இலங்கை முழுவதும் Wendy’s தனது கிளைகளை விரிவுபடுத்துவதற்கான அத்திவாரத்தை அமைப்பதோடு, அந்நிறுவனத்திற்கே உரித்தான தனித்துவமான உணவுகளையும், சிறப்பான உணவருந்தும் அனுபவத்தையும் புதிய சந்தைக்கு அறிமுகம் செய்யும்.
































