Nov 23, 2026 - 03:41 PM

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.5 ஆக அதிகரித்துள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.1 ஆக காணப்பட்ட நிலையில், ஒக்டோபர் மாதத்தில் 8.5 ஆக உயர்வடைந்துள்ளது.
உணவு பணவீக்கமானது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 7.2 ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.9 ஆக காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 9.1 காணப்பட்ட உணவல்லா பணவீக்கமானது ஒக்டோபர் மாதத்தில் 9.5 ஆக உயர்வடைந்துள்ளது.
































