Oct 13, 2026 - 02:07 PM

Vietjet, இலங்கை மற்றும் வியட்னாம் இடையே முதலாவது நேரடி விமான சேவையை அறிமுகம் செய்த சில வார
காலப்பகுதியினுள், ஆண்டின் சிறந்த ஆசியாவின் குறைந்த செலவு/ஹைபிரிட் விமான சேவை வழங்குனராக தெரிவு செய்யப்பட்டிருந்தது. விமான சேவை மற்றும் பிரயாண தொழிற்துறைகளுக்கான சந்தை பகுப்பாய்வு மற்றும் புலனாய்வு சேவைகளை வழங்கும் முன்னணி சர்வதேச செயற்பாட்டாளரான CAPA – Centre for Aviation இனால் கௌரவிப்பு Vietjet இற்கு வழங்கப்பட்டிருந்தது. ஜப்பானின், ஹொக்காய்தோ, சிட்டோஸ் பகுதியில் நடைபெற்ற CAPA Airline Leader Summit Asia 2026 நிகழ்வின் போது, Vietjet இன் மூலோபாய விருத்தி மற்றும் வியாபார மாதிரி புத்தாக்கம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
15 வருட கால செயற்பாடுகளைத் தொடர்ந்து, தனது ஹைபிரிட் விமான சேவை மாதிரியை மேம்படுத்துவதுடன், செயற்பாட்டு வினைத்திறன் மற்றும் செலவு ஒழுக்கத்தை மேம்படுத்துவதிலும் Vietjet கவனம் செலுத்துகின்றது. இந்த மாதிரியினூடாக பயணிகளுக்கு கட்டணங்கள், வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பெருமளவு தெரிவுகள் வழங்கப்படுவதுடன், தனது சர்வதேச வலையமைப்பை விஸ்தரிப்பதற்கும், ஒட்டுமொத்த பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தவும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
Vietjet இன் பணிப்பாளர் சபையின் உப தலைவி, உப தலைவி மற்றும் குழும பிரதம நிதி அதிகாரியுமான ஹோ கொக் யென் புஹொங் கருத்துத் தெரிவிக்கையில், “Vietjet ஐப் பொறுத்தவரையில், ஹைபிரிட் என்பது போட்டியிடும் வகையிலான பயணக்கட்டணங்கள், தொழிற்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பயணிகளுக்கு அதிக தெரிவுகளையும் மேம்பட்ட அனுபவங்களையும் வழங்குவதைக் குறிக்கிறது. எமது வளர்ச்சியின் ஒவ்வொரு படியும் எம் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் Vietjet இணைக்கும் சந்தைகளுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதை உறுதிசெய்யும் வகையில், எமது விமானத் தொடரணி, தொழினுட்பம் மற்றும் சேவைத் திறன்களில் நாம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.” என்றார்.
Vietjet இன் ஹைபிரிட் மூலோபாயம், அதன் Wide-body Airbus A330 விமான தொடரணியின் வளர்ச்சி மற்றும் ஓய்வுநேரப் பயணம், உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்தல் முதல் வர்த்தகப் பயணம் வரையிலான பல்வேறுபட்ட பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான பயணக்கட்டணங்கள் மற்றும் சேவைகளில் பிரதிபலிக்கிறது. பயணிகள் தமது தேவைகளுக்கு மிகச்சிறந்த முறையில் பொருந்தக்கூடிய தயாரிப்புகளையும் சேவைகளையும் தெரிவு செய்ய முடிவதுடன், வியட்நாமிய மற்றும் சர்வதேச உணவுகளின் மிகச்சிறந்த சுவைகளைக் கொண்ட பலதரப்பட்ட உணவுப்பட்டியலை சுவைக்கவும், Vietjet இன் விமானப் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் கவனமிக்க சேவையை அனுபவிக்கவும் முடியும்.
இலங்கைப் பயணிகள் இப்போது இந்த அணுகுமுறையை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை இயங்கும் நேரடி கொழும்பு - Ho Chi Minh City விமானச் சேவையின் ஊடாக அனுபவிக்க முடியும். வானிலும் தடையற்ற இணைய இணைப்பை வழங்கும் நோக்கில், Vietjet தனது அனைத்து விமானங்களிலும் Starlink இணையச் சேவையை நிறுவுவதற்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது. இந்த அதிவேக இணைய இணைப்பு மூலம், பயணிகள் தங்களது பயண நெடுகிலும் பணிபுரியவும், தொடர்பிலிருக்கவும் மற்றும் இணையவழிப் பொழுதுபோக்குகளை அனுபவிக்கவும் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவர்.
பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு மேலதிகமாக, Vietjet நிறுவனம்Long Thanh பகுதியில் விமானப் பராமரிப்பு மையம் ஒன்றில் முதலீடு செய்து வருவதோடு, வியட்நாமில் விமான எஞ்சின்களின் பராமரிப்பு, திருத்தம் மற்றும் மறுசீரமைப்பு (MRO) வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது. மேலும், தொழில்நுட்பம், AI, Data மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் தனது ஒத்துழைப்பையும் இந்நிறுவனம் விரிவாக்கி வருகின்றது. இத்தகைய முன்முயற்சிகள் Vietjet இன் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவதுடன், வளங்களின் மீள்தன்மையை அதிகரித்து, உலகளாவிய விமானப் போக்குவரத்து மதிப்புச் சங்கிலியில் வியட்நாமிய நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்த பக்கபலமாக அமையும்.
Internationalizationசர்வதேசமயமாக்கல் என்பது Vietjet இன் வளர்ச்சி மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. அடுத்த தலைமுறை விமானங்கள் மீதான முதலீடுகள் மற்றும் புதிய கொழும்பு வழித்தடம் உள்ளிட்ட அதன் சர்வதேச விமானப் பயணத்தின் விரிவாக்கம் ஆகியவற்றோடு இணைந்து, இந்நிறுவனம் பயிற்சி, பராமரிப்பு, Ground Services மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான விமானப் போக்குவரத்துச் சூழல் அமைப்பை உருவாக்கி வருகின்றது. இது அதன் நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
Vietjet பெற்ற பல சர்வதேச அங்கீகாரங்களின் வரிசையில் இந்த CAPA விருதும் இணைந்துள்ளதுடன், மாலைதீவில் நடைபெற்ற உலகப் பயண விருதுகள் (World Travel Awards) விழாவில் 2026 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் முன்னணி விமானச் சேவை வர்த்தக நாமமாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்விருது கிடைத்துள்ளது. தனது ஹைபிரிட் மூலோபாயத்தின் மூலம், விமானப் பயணத்திற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், வியட்நாமிற்கும் உலகிற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தவும் Vietjet இலக்கு வைத்துள்ளது. இது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வளர்ச்சிக்குப் பெருமளவில் பங்களிக்கிறது.
விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு சிறந்த மூலோபாயம், வினோதனமான கண்டுபிடிப்புகள் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றில் தனித்துவமான சாதனைகளைப் படைத்த விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தலைவர்களை அங்கீகரிக்கும் முகமாக CAPA இன் சிறந்த விமானப் போக்குவரத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய விருதுகள் வழங்கும் விழா ஒக்டோபர் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் ஜப்பானின் ஹொக்காய்தோவிலுள்ள, சிட்டோஸ் நகரில் நடைபெற்றது.
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை
ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச்
சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட
கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட
இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான
கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள
செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து
நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை
வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட
சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண
வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு
பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ
நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு,
உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com
நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக
ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச்
சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline
Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண
விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

































