Oct 13, 2026 - 02:57 PM

Prime இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை உலகிற்கு எடுத்துச் சென்றுள்ளது; அவுஸ்திரேலிய இலங்கை வர்த்தக பேரவையினால் வழங்கப்பட்ட கெளரவப் பட்டியல் மற்றும் வர்த்தக விருதுகள் 2026 நிகழ்வில், ரியல் எஸ்டேட் துறை ஊடாக இலங்கைக்கு கணிசமான அளவு அந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டு வந்தமைக்காக Prime Group இற்கு அங்கீகாரம்
Prime Group, அவுஸ்திரேலிய இலங்கை வர்த்தக பேரவையினால் வழங்கப்பட்ட கெளரவப் பட்டியல்
மற்றும் வர்த்தக விருதுகள் 2026 நிகழ்வில், ரியல் எஸ்டேட் துறை ஊடாக இலங்கைக்கு கணிசமான அளவு
அந்நிய நேரடி முதலீடுகளைக் கொண்டு வந்தமைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, இலங்கை ரியல்
எஸ்டேட் துறையை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லும் அதன் மூன்று தசாப்த காலப் பயணத்தில்
மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
2026 ஒக்டோபர் 5ஆம் திகதி மெல்பேர்ன் நகரில் Pullman Melbourne on the Park இல் இந்நிகழ்வு
நடைபெற்றதுடன், கௌரவ லோர்ட் மேயர் நிக்கலஸ் ரீஸ், அவுஸ்திரேலியாவுக்கான
இலங்கையின் உயர் ஸ்தானிகர் யசோஜா குணசேகர மற்றும் அவுஸ்திரேலியா இலங்கை
வணிகப் பேரவையின் தலைவி தில்கி பெரேரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இலங்கையை ரியல்
எஸ்டேட் முதலீடுகளுக்கான சிறந்த இடமாக உலகளவில் விளம்பரப்படுத்துவதற்கும், வெளிநாட்டு வாழ்
இலங்கையர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை உள்ளூர் ரியல் எஸ்டேட் துறையிலுள்ள
வாய்ப்புகளுடன் இணைப்பதற்கும் Prime Group முன்னெடுத்து வரும் முயற்சிகளை இது
அங்கீகரிக்கின்றது.
துணிவான கண்டுபிடிப்புகள், துறை சார்ந்த உயர்தரக் குறியீடுகள் மற்றும் சிறப்பம்சங்களுக்கான
தளர்வில்லாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இலங்கை ரியல் எஸ்டேட் துறையின் பரிணாமத்தை
வடிவமைத்து, அத்துறையின் முன்னணியில் Prime Group திகழ்கின்றது. விருது பெற்ற பாரம்பரியத்தைக்
கொண்ட இலங்கையின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான Prime,
தலைமுறை தலைமுறையாக முதலீட்டாளர்களுக்கு நிலைத்துநிற்கும் மதிப்பையும் நம்பிக்கையையும்
உருவாக்கித் தரும் அதேவேளையில், இத்துறைக்கான உயர்தரக் குறியீடுகளைத் தொடர்ந்து நிர்ணயித்து
வருகிறது.
இந்த கௌரவிப்பு தொடர்பில் Prime Group இன் தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத்
தெரிவிக்கையில், “கடந்த மூன்று முதல் நான்கு வருடங்களாக, இலங்கை ரியல் எஸ்டேட் துறையை
உலகிற்கு எடுத்துச் செல்லும் தெளிவான இலக்குடன் Prime செயலாற்றுகின்றது. இலங்கையால் ரியல்
எஸ்டேட் துறையை ஏற்றுமதி செய்ய முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்;
இன்று அந்தத் தொலைநோக்கை நிஜமாக்கிக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச முதலீட்டாளர்களுக்கு
எங்களது சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் இலங்கைக்கு மதிப்புமிக்க அந்நியச்
செலாவணியைக் கொண்டு வரும் இந்த முயற்சியின் வளர்ந்து வரும் தாக்கத்தையே இந்த அங்கீகாரம்
பிரதிபலிக்கின்றது. இது அவுஸ்திரேலியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை; எங்களது சேவைகள் ஐக்கிய
இராஜ்ஜியம், கனடா, அமெரிக்கா, GCC நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சந்தைகள் வரை
விரிவடைந்துள்ளன. அண்மையில், Prime Marina 1 மற்றும் Prime Marina 2 ஆகிய திட்டங்கள் இந்தப்
பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறித்துள்ளதுடன், உலக அரங்கில் போட்டியிடுவதற்கான
இலங்கை ரியல் எஸ்டேட்டின் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளன. சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும்
வகையிலான சொத்துக்களை இலங்கையில் உருவாக்குவதிலும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார
வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் நாங்கள் பெருமிதமடைகிறோம்”என்றார்.
எங்களது வர்த்தக நாமத் தூதுவர்களான BNS உடனான Prime குழுமத்தின் சமீபத்திய அவுஸ்திரேலியா
மற்றும் நியூசிலாந்து விஜயத்தின் அபார வெற்றி இதற்கு மற்றொரு வலுவான சான்றாகும். மெல்போர்ன்,
சிட்னி, அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த், கிறைஸ்ட்சர்ச், ஆக்லாந்து உள்ளிட்ட முக்கிய நகரங்களில்
புலம்பெயர் இலங்கை சமூகத்தினர், வருங்கால முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச
முதலீட்டாளர்களுடனான தொடர்பு, இலங்கை இசைத்துறையை உலகிற்கு எடுத்துச் செல்லும்
தொலைநோக்கை வெளிப்படுத்தியது. எங்களைப் பொறுத்தவரை, இது வெறும் பொழுதுபோக்கிற்கும்
மேலானது; Prime தனது உலகளாவிய தொடர்புகளை இலங்கைகளுக்கான உலகளாவிய
முதலீடுகளாகவும், நல்வாய்ப்புகளாகவும், மதிப்பாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகும்” என Prime
Group இன் இணைத் தலைவி சந்தமினி பெரேரா தெரிவித்தார்.
Prime Group தனது சர்வதேச செயல்பாடுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, இலங்கை ரியல் எஸ்டேட்
துறையை பரந்த உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தி வரும் நிலையில் இந்த அங்கீகாரம்
கிடைத்துள்ளது.

































