Oct 13, 2026 - 02:53 PM

SLT-MOBITEL தனது வர்த்தக நாமத் தூதுவர் ருமேஷ் தரங்க பதிரகேவுக்கு, இலங்கையின்
முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றமைக்காக
வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. ஜப்பானின், ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய
விளையாட்டுப் போட்டிகளில் 88.55 மீற்றர்கள் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க
வென்றிருந்தார்.
தற்போதைய ஒலிம்பிக் சம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட பலம்மிக்க வீரர்கள்
அடங்கிய கடுமையான போட்டியாளர்களுக்கு மத்தியில் களமிறங்கி ருமேஷ் தரங்க ஈட்டியுள்ள
வெற்றி, அவரது மிகச்சிறந்த 2026 விளையாட்டுப் பருவத்தில் மற்றொரு மைல்கல்லாக
அமைந்துள்ளது. ஏற்கனவே பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற டைமண்ட் லீக் சம்பியன் பட்டத்தையும்,
புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள அல்டிமேட் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ள அவர்,
இப்புதிய வெற்றியின் மூலம் உலகின் மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரர்களில் ஒருவர் என்பதை மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் தேசியத் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற வகையில்,
விளையாட்டுத்துறையில் ருமேஷ் தரங்க அடைந்துவரும் புதிய சாதனைகளின் சிகரங்களை
எட்டுவதற்கான முயற்சியில் அவருக்குப் பக்கபலமாக நிற்பதற்கு SLT-MOBITEL உறுதியளித்துள்ளது.
அவரது இந்த அண்மைக்கால மகத்தான சாதனை நாட்டின் விளையாட்டு வரலாற்றில் மற்றொரு
குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதுடன், தரங்க மற்றும் நாட்டின் பகிரப்பட்ட ஒலிம்பிக்
கனவுக்குச் சக்தியளிப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பையும் மேலும்
வெளிப்படுத்துகின்றது. ஒலிம்பிக் புகழை நோக்கிய ருமேஷின் பயணத்திற்கான தனது ஆதரவின்
ஊடாக, உலக அரங்கில் நாட்டின் ஆற்றல்மிகு பெருமையை மீண்டும் நிலைநிறுத்துவதில் SLT-
MOBITEL தொடர்ந்து முன்னின்று செயலாற்றுகின்றது.
பதக்கம் வென்று நாடு திரும்பிய தரங்கவுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், SLT-
MOBITEL இனால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சாதனை
நாயகனின் வருகையைக் கொண்டாடும் வகையில், பொது முகாமையாளர் அசித ஜயசேகர, பிரதிப்
பொது முகாமையாளர் கபில குலசேன, பிரதிப் பொது முகாமையாளர் புஷ்ப தரங்க மற்றும் பிரதிப்
பொது முகாமையாளர் தில்குஷன் பெரேரா ஆகியோர் அவரைத் தாய்நாட்டிற்கு அன்போடு
வரவேற்றனர்.
ஒரு நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளரிலிருந்து ஆசியாவின் மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரராக
உருவெடுத்துள்ள தரங்கவின் இந்த வெற்றிப்பயணம், SLT-MOBITEL இன் உறுதிப்பாடு, கட்டுப்பாடு
மற்றும் ஆற்றல்மிகு பெருமையை நோக்கிய தேடல் போன்ற குணாதிசயங்களை
வெளிப்படுத்துகின்றது.
நாட்டின் விளையாட்டு வரலாற்றில் பதிவாகியுள்ள இந்த அண்மைக்கால மகத்தான சாதனை, உலக
அரங்கில் இலங்கையின் தடகள வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்குப் பக்கபலமாக
நிற்பதற்குமான SLT-MOBITEL இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும்
உறுதிப்படுத்துகின்றது.
தரங்க தனது மிகச்சிறந்த சாதனைகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்
வேளையில், அவர் இன்னும் உயர்ந்த சிகரங்களை எட்டுவதற்கு ஆதரவளிப்பதுடன், புதிய
தலைமுறை இலங்கைத் தடகள வீரர்களுக்கு ஊக்கமளிப்பதற்கான தனது உறுதியை SLT-MOBITEL
மீண்டும் வலியுறுத்துகின்றது.

































