Oct 14, 2026 - 09:49 AM

இன்று (14) சந்திர பகவான் விருச்சிக ராசியின் விசாகம், பின் அனுஷம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ள தினத்தில் மேஷ ராசியை சேர்ந்த ரேவதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று துலாம் ராசியில் சுக்ரன், புதன் மற்றும் கடக ராசி செவ்வாய் குரு ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கை யோகம் நடக்கிறது. இந்த நாளில் உருவாகக்கூடிய குரு மங்கள யோகம், லட்சுமி நாராயண யோகம் 12 ராசிகளுக்கு தரும் பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செல்வ நிலை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புக்களை செய்து முடிப்பதற்கான பயனுள்ள நாளாக அமையும். இன்று வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்கவும். அரசு சார்ந்த வேலைகளில் கவனமாக இருக்கவும். இன்று சுப காரியங்கள் தொடர்பாக அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் செய்யக் கூடியவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும்.. உணவு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி இடையே விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படலாம். என்று நீங்கள் எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ளா நேரிடும். அதன் மூலம் நல்ல அனுபவமும், மகிழ்ச்சியும் உண்டாகும். வியாபாரம் செய்யக் கூடியவர்கள் இழுப்பரியான வருமானம் கிடைக்கும். இன்று உங்கள் மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். காதல் விவகாரங்களில் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக அமையும். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் நிலவும். காதல் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு வேலை தொடர்பாக பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்படவும். சுப காரியங்கள் தொடர்பாக செலவு ஏற்படலாம். இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பாக தொல்லை தந்தவர்கள் விலகி விடுவார்கள். இன்று நீங்கள் சில பயனற்ற செலவுகளை செய்ய நேரிடலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று தாய் வழி சொந்தங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அவர்களிடம் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் குறையும். இன்று உங்களுடைய நிதிநிலை மேம்படும் என்பதால், கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைய தொடங்கும். என்று உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை கிடைக்கும். இன்று உணவு தொடர்பாக கவனமாக இருக்கவும். பண விவகாரங்களில் சில சிக்கல்கள் ஏற்படலாம். உங்களுடைய உற்பத்தி திறன் அதிகரிக்க சிரமப்பட நேரிடும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்றுகுடும்ப உறவு முறையில் உள்ள சிக்கல்களை பொறுமையுடன் கையாளவும். அலுவலகத்தில் நல்லுறவு அனுபவிப்பீர்கள். உடல்நலம் மேம்படக்கூடிய நாள். இன்று உங்கள் எதிர்காலம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம்.. நிதானமான சிந்தனை தேவைப்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நெருங்கிய நண்பர்களால் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். இன்று பணியிடத்தில் வேகமாக வேலையை முடிப்பதற்கான சூட்சமத்தை புரிந்து கொள்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். உங்கள் காதலருடன் அல்லது வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய பணிகளை முடிப்பதில் உங்களுடைய அணுகுமுறை மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். சுக காரியங்களை முன் நின்று செய்து முடிப்பீர்கள். என்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தை மாற்றுவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதி சிக்கல்கள் குறையக்கூடும். மேலும் சில வழிகளில் உங்களுடைய செல்வநிலை அதிகரிக்கும். காதல் உறவில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தொழில் தொடர்பான பணிகளில் அனைத்தையும் முறையாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்த மந்த தன்மை விலகும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். எந்த ஒரு வாக்குறுதியை கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். திறமைக்கு உண்டான மரியாதை கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும். காதல் சார்ந்த விஷயங்களில் உங்களுடைய உறவு வலுவடையும். நேர்மறையான தாக்கங்களை அதிகம் சிந்திப்பீர்கள். தடைகளை கூட எளிதாக கடக்க முடியும். தொழில் ரீதியான முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலனை தரும். உடன் இருப்பவர்களின் அனுபவம் உங்களுக்கு உதவும். என்று குடும்பத்தில் சிறு சலசலப்பு தோன்றி மறையும். அலுவலக பணிகளில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய காதல் விஷயத்தில் துணையின் கருத்துக்களுக்கு செவி சாய்க்கவும். உங்களுடைய உடல் நலம் மற்றும் நிதிநிலை தொடர்பாக கவனமாக இருப்பது நல்லது. உறவுகளில் எதிர்பாராத மாற்றங்களை காண்பீர்கள். தொழில் ரீதியாக நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்திலும், பண விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். உங்களுடைய உறவில் எதிர்பாராத சில மாற்றங்களை சந்திப்பீர்கள்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன் கிடைக்கக்கூடிய நாள். உங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய உறவு சிக்கல்களை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய தினம். தொழில் தொடர்பாக சவால்களை உங்களுடைய முயற்சிகளால் முறியடிக்க முடியும். இன்று உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும். கடன் பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வர முயல்வீர்கள். இன்று சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சேமிப்புகள் அதிகரிக்க கூடிய நாள். உங்களுடைய வீடு அல்லது வாகனம் தொடர்பாக செலவுகள் இருக்கலாம். நம்பிக்கையே பெறுவீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். இன்று ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றவும். பண விவாகரங்களில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. காதல் வாழ்க்கையில் பயனுள்ள விஷயங்களை விவாதிப்பீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் நேர்மறையான ஆற்றல் நிறைந்ததாக உணர்வீர்கள். வேலை அல்லது தொழில் தொடர்பாக எதிர்கொள்ளக்கூடிய சவால்களை சமாளிக்க முடியும். இது உங்களுடைய மனதை வலிமையாக்கும். இனிமையான காதல் வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். தொழிலில் வெற்றி அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். இன்று உங்களுடைய பிரச்சனைகளை புதிய முறைகளில் தீர்க்க முயல்வீர்கள். இன்று சில நல்ல திருப்புங்கள் ஏற்படும்.
































