Oct 17, 2026 - 02:30 PM

'காவன்திஸ்ஸ' யானையின் மறைவு குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
''எங்கள் பெருமை. எங்கள் அன்பு. தேசத்தின் பெருமைமிக்க யானை அரசன் காவந்திஸ்ஸவுக்கு நற் பயணம்!
காவன்திஸ்ஸ யானையின் இறுதிச் சில நாட்களும், யானைக்குக் கிடைத்த சிகிச்சைகளும் குறித்து நீதியான விசாரணை ஒன்றை நடத்தி, யானை அரசன் இறப்பதற்கான உண்மையான காரணம் குறித்து அரசாங்கம் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்'' என அந்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
































