Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

    Mobitel Inner 1278

    சீனாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கிளப்பிய மரண வதந்தி, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே வடகொரியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


    42 வயதான அதிபர் கிம் ஜாங் உன், நேற்று (19) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் காலணிகள் தயாரிப்பு கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    அங்குள்ள தயாரிப்புகளை அவர் கையில் எடுத்துப் பரிசோதிப்பதும், அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


    எனினும், இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சரியான திகதி மற்றும் அதன் உண்மைத்தன்மை குறித்து சர்வதேச ஊடகங்களால் இன்னும் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.


    அமெரிக்காவில் வசித்து வரும் சீன ஜனநாயகக் கட்சியின் அதிருப்தியாளரான வான்ஜூன் ஷி , கடந்த 18 ஆம் திகதி 'X' தளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளே இந்த வதந்திகளுக்குக் காரணமாக அமைந்தன.


    அவர் தனது பதிவில், "கிம் ஜாங் உன்னுக்கு மூளையில் கடுமையான ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். பெய்ஜிங்கில் உள்ள வைத்தியசாலை நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் ரகசியமாக வடகொரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


    இதனால் வடகொரியாவில் அரசியல் அதிகாரப் போட்டி ஏற்படாமல் தடுக்க சீனா 9,000 இராணுவ வீரர்களை பியாங்யாங்கிற்கு அனுப்பியுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.


    ஆனால், இதற்கான எந்தவொரு வைத்திய ஆதாரங்களையோ அல்லது சான்றுகளையோ அவர் சமர்ப்பிக்கவில்லை.


    இருப்பினும், இந்த செய்தி உலக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால், கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அவரது தங்கை கிம் யோ ஜாங் நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்பாரா என்ற ஊகங்களும் எழத் தொடங்கின.


    வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், கிம் ஜாங் உன் சுமார் 140 கிலோ எடை கொண்டுள்ளார்.


    உடல் பருமன் காரணமாக அவருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஆனால், அவருக்குப் பெரிய அளவிலான வைத்தியப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும், அண்மையில் நடந்த கடற்படை கப்பல் ஆய்வின் போது அவர் படிக்கட்டுகளில் வேகமாக ஓடி ஏறியதாகவும் உளவு அமைப்பு குறிப்பிட்டிருந்தது.


    2011 ஆம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல்லின் மறைவுக்குப் பிறகு வடகொரியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கிம் ஜாங் உன், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.