Oct 22, 2026 - 10:11 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்

மட்டக்களப்பு, கரடியனாறு வயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 61 வயதுடைய விவசாயி ஒருவர் நேற்று (21) இரவு உயிரிழந்துள்ளதாகக் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு, கொடுவாமடு, பங்குடாவெளி நாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 61 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விவசாயி, கொடுவாமடு பகுதியில் உள்ள தனது வயலைப் பாதுகாப்பதற்காக நேற்று மாலை வீட்டிலிருந்து சென்று காவலில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது வயலுக்குள் நுழைந்த காட்டு யானை அவரைத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
































