Oct 22, 2026 - 11:18 AM

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம்.
இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. அதிலும் கேரளாவில் இப்படம் இமாலய சாதனையை நிகழ்த்தி வருகிறது.
கேரளாவில் படம் வெளியாகிய முதல் நாளே ரூ 12 கோடி வசூல் செய்ய, தற்போது 7 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 60+ கோடி கேரளாவில் மட்டும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதோடு, கேரளாவில் இதுநாள் வரை நம்பர் 1 இடத்தில் இருந்த லியோ வசூலை 7 நாட்களில் முந்தி, ஜெய்லர் 2 புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
































