Oct 22, 2026 - 05:37 PM

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டொம் பாண்டன் 50 ஓட்டங்களையும், பென் டக்கெட் 29 ஓட்டங்களையும் பெற்று நல்ல தொடக்கத்தை வழங்கினர்.
தொடர்ந்து வந்த ஜோ ரூட் 69 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மத்திய வரிசையில் ஜோடி சேர்ந்த அணியின் தலைவர் ஹரி ப்ரூக் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அசுர வேகத்தில் உயர்த்தினர்.
இறுதிவரை அதிரடியை வெளிப்படுத்திய ஹரி ப்ரூக் 116 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் அடங்கலாக 202 ஓட்டங்களை அதிரடியாக குவித்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆட்டமிழக்காமல் நின்ற வில் ஜேக்ஸ் வெறும் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அசித பெர்னாண்டோ மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன்படி, இலங்கை அணி வெற்றிபெற 50 ஓவர்களில் 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
































