Oct 23, 2026 - 02:48 PM

ஹட்ச் [HUTCH] மற்றும் பிரவுண்ஸ் ஈவி [Browns EV] என்பன ஒரு உற்சாகமான புதிய பங்குடைமையில் ஈடுபட்டுள்ளன,இதற்கிணங்க ஹட்ச் விருதுப்புள்ளிகள் [HUTCH Cheer Points] வாடிக்கையாளர் விசுவாசத் திட்டத்தின் மூலம் இலங்கையின் முதல் மின்சார வாகன சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. வாடிக்கையாளர்கள் தமது விசுவாசப் புள்ளிகளைப் பயன்படுத்தி Wuling Cloud, Wuling Binguo, BAW E7 மற்றும் BAW E7 Pro உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மின்சார வாகன மாதிரிகளில் பிரத்தியேக விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம், மேலும் சில்வர் முதல் டயமண்ட் வரையிலான உறுப்பினர் நிலைகளின் அடிப்படையில் சேமிப்புகளைப் பெறலாம். பிரவுண்ஸ் அண்ட் கம்பனி பிஎல்சி [Brown & Company PLC] நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான பிரவுண்ஸ் ஈவி [Browns EV], இலங்கையில் Wuling மற்றும் BAW மின்சார வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக திகழ்கிறது.
நிலையான போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள மின்னேற்றும் [ChargeUP] நிலையங்களில் மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யும் போது, வாகன உரிமையாளர்களுக்கு பணத்தை மீளப் பெறும் சலுகைகளை வழங்குவதற்காக ஹட்ச், ChargeUP நிறுவனத்துடனும் பங்குடைமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொதுவான மின்சார வாகன மின்னேற்றும் வலையமைப்பானது அனைத்து மின்சார வாகன வர்த்தக நாமங்களையும் ஆதரிப்பதுடன், ChargeUP மொபைல் செயலி மூலம் வசதியான அணுகலையும் வழங்குகிறது. இந்தப்பங்குடைமைகள் வேகமாக வளர்ந்து வரும் விருதுப்புள்ளிகள் திட்டத்தின் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கின்றன, வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளுக்கு அப்பால் வாகன மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கும் வெகுமதிகளை விரிவுபடுத்துகின்றன.
பிரவுண்ஸ் ஈவி நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளர் பவித்ரா ஜயசேகர தெரிவிக்கையில் , “ஹட்ச் உடனான இந்தப்பங்குடைமையானது , அதிகளவிலான இலங்கை நுகர்வோருக்கு மின்சாரப் போக்குவரத்தை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான முன்னேற்றமான ஒரு படியாகும். வாடிக்கையாளர் விசுவாசத்தின் பெறுமதியையும் மின்சார வாகனத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பையும் இணைப்பதன் மூலம், பயனளிப்பதோடு அர்த்தமுள்ளதுமான திட்டமொன்றினை நாம் உருவாக்குகிறோம்” என்றார்.
ஹட்ச் ஸ்ரீலங்காவின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரியான ஹம்தி ஹஸன் தெரிவிக்கையில்'' , “நிலைத்தன்மை என்பது எமது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான பெறுமதியின் மூலம் நாம் ஆதரிக்கும் ஒரு விடயமாகும்; அதை மக்களின் அன்றாடச் செயல்களில் ஒருங்கிணைக்கிறோம். வாடிக்கையாளர்கள் தமது விருதுப்புள்ளிகளை மின்சார வாகன விலைக்கழிவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குவதன் மூலம், நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்துக்கான இலங்கை குடும்பங்களின் முக்கியமான முன்னேற்றத்திற்கு நாம் ஆதரவளிக்கிறோம். இதன் மூலம் அவர்களின் குடும்பங்களுக்கு சேமிப்பை ஏற்படுத்துவதோடு, மேலும் பசுமையான இலங்கையையும் உருவாக்குகிறோம்.”
இந்த மூலோபாய நடவடிக்கை, ஹட்ச் நிறுவனத்தின் தாய் நிறுவனமான CK Hutchison Holdings-இன் விரிவான நிலைத்தன்மை உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகள் முழுவதும் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் குறைந்த கார்பன் வணிக நடைமுறைகளை ஆதரிக்கிறது. தனது நிலைத்தன்மை முயற்சிகளின் மூலம், CK Hutchison காலநிலை நடவடிக்கை, கார்பன் நீக்கம் மற்றும் வளங்களின் திறமையான பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இலங்கையில்,பிரவுண்ஸ் மற்றும் ChargeUP நிறுவனங்களுடனான தனித்துவமான பங்குடைமைகள் மூலம் ஹட்ச் இந்த உறுதிப்பாட்டை நாட்டிற்கும் வாடிக்கையாளர்களுக்கும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது; இதன் மூலம் மின்சார வாகன உரிமை மற்றும் மின்னேற்றம் செய்தல் என்பவற்றை மேலும் பயனுள்ளதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுகின்றது.
































