Oct 23, 2026 - 05:01 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

நுவரெலியா அரலியா ஹோட்டலில் எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 500 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி தனியார் நட்சத்திர விடுதியில் ஒரு விழாவுடன் இன்று (23) நடைப்பெற்றது இதில் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனா்.
நுவரெலியா அரலியா கிரீன் ஹில்ஸ், நுவரெலியா அரலியா கிரீன் சிட்டி மற்றும் நுவரெலியா அரலியா ரெட் ஆகிய 3 சுற்றுலா ஹோட்டல்களின் ஊழியர்களின் இசை வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பிக்கப்பட்டு கேக் கலவைக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுமந்து நுவரெலியா பிரதான நகரை நடைபவனியாக சுற்றி வந்து நுவரெலியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிரகரி வாவி கரையோரத்தில் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த கேக் கலவை தயாரிக்கும் பணியில் ஹோட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
































