Oct 25, 2026 - 11:54 AM

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் பல வெடிப்புகள் சம்பவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு குறைந்தது மூன்று வெடிப்புகளாவது இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதனிடையே, ரியாத் நகர மக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்காக, சவுதி அரேபியாவின் சிவில் பாதுகாப்புப் பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தினால் தேசிய அவசரகால முன்னெச்சரிக்கை முறைமை செயல்படுத்தப்பட்டது.
இருப்பினும், பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
































