Oct 26, 2026 - 10:01 PM

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க நீக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக லஹிரு உதார இலங்கை குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டிகளில் மோதவுள்ளன.
இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
































