Oct 31, 2026 - 12:59 PM

நாரஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் (Online Appointments) வசதி எதிர்வரும் திங்கட்கிழமை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனப் பதிவு, உரிமையாளர் மாற்றம், தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளிட்ட சேவைகளுக்காக இந்த ஒன்லைன் முன்பதிவு வசதி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
குறித்த ஒன்லைன் முன்பதிவுகளுக்குப் பின்வரும் இணையதள இணைப்பின் ஊடாகப் பிரவேசிக்க முடியும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
































