Nov 1, 2026 - 07:34 AM

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 815 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
































