Nov 3, 2026 - 08:35 AM

ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ வளங்களைப் பாதுகாப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க விமானம் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தாக்குதலானது ஒரு பெரிய அளவிலான போர் நடவடிக்கைக்கு நிகரானது அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரான் தரைப்படை- வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவ வளங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் இந்தத் தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மற்றொரு அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முந்தைய நாள் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், ஈரான் தொடர்பான நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையும் இந்நிகழ்வு தெளிவுபடுத்துகிறது.
இதற்கிடையில், நேற்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிக்கையொன்றை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னமும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
































