Nov 3, 2026 - 10:49 AM

2026 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பெயர் பட்டியலின்படியும், 2026(1) மேலதிக வாக்காளர் பட்டியலின்படியும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அரசியலமைப்பின் 98 ஆவது உறுப்புரையின் (8) ஆம் உட்பிரிவின் விதிகளுக்கு அமைவாக, ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான 2511/02 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக அச்செய்திக் குறிப்பில் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்தைய 18-லிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் பதுளை மாவட்டத்திற்கான எண்ணிக்கை முந்தைய ஒன்பது உறுப்பினர்களிலிருந்து எட்டு உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.


































