Nov 3, 2026 - 12:01 PM

இலங்கையின் தேயிலைத் தொழிற்துறைக்கு புத்துயிரளிக்கும் நோக்கில் கொமர்ஷல் வங்கி பிரத்தியேகக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறை மற்றும் கிராமிய நுண் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும் பொருட்டு, தேசிய தேயிலைத் தொழிற்துறை முழுவதும் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட வங்கியின் மூலோபாய நடவடிக்கைகளை இது வெளிப்படுத்துகிறது.
இந்த புதிய கடன் திட்டத்தின் மூலம், தேயிலைச் சிறுதோட்ட உரிமையாளர்கள், முதிர்ந்த தேயிலை நிலங்களை மறுசீரமைக்கவும், பயிர்ச்செய்கை முறைகளை மேம்படுத்தவும், நாட்டின் மிக முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான தேயிலைத் தொழிற்துறையின் உற்பத்தித்திறன் மற்றும் நிலையான தன்மையை வலுப்படுத்தவும் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
இலங்கைத் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் (SLTFOA) மற்றும் பங்களிப்பு வழங்கும் தேயிலைத் தொழிற்சாலைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'இலங்கைத் தேயிலைத் துறைக்கு புத்துயிரளித்தல்' கடன் திட்டமானது, இத்துறையில் காணப்படும் ஒரு முக்கிய சவாலுக்குத் தீர்வுகாண முனைகின்றது. அதாவது, தேயிலை உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் தேவையான நீண்டகால முதலீடுகளுக்கு மலிவு விலையிலான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் தனித்துவமான அம்சம், தொழில்துறையுடன் இணைக்கப்பட்ட நிதியளிப்பு மாதிரியாகும். இது வங்கியின் நிதிச் சிறப்பறிவு, SLTFOA அமைப்பின் துறைசார் வலையமைப்பு மற்றும் தேயிலைச் சிறுதோட்ட உரிமையாளர்களால் பராமரிக்கப்படும் தேயிலைத் தொழிற்சாலைகள் ஆகியவற்றை ஒன்றுதிரட்டுகிறது. சாதாரண வங்கிச் சேவைகளுக்கும் அப்பால் சென்று, தகுதியுடைய விவசாயிகள் தங்களது தேயிலை நிலங்களை மறுசீரமைக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் தேவையான நிதியுதவியைப் பெற்றுக்கொடுப்பதை இந்த கூட்டு அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மறுநடுகை மற்றும் இடைநடுகை, மண் புனரமைப்பு, நில ஆயத்தப் பணிகள், சான்றளிக்கப்பட்ட நடுகைப் பொருட்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளைக் கொள்முதல் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், இயந்திரமயமாக்கல், நவீன விவசாய முறைகள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் ஆகியவற்றிற்காக இந்நிதி வசதி வழங்கப்படுகிறது. முதிர்ந்த தேயிலைச் செடிகளை அகற்றிப் புதிய செடிகளை நடுதல், நிலங்களில் காலியாக உள்ள இடைவெளிகளை நிரப்புதல் மற்றும் தேயிலை வளர்க்கப்படும் நிலங்களை மேலும் உற்பத்தித்திறன் மிக்கதாகப் பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உதவுவதையே இம்முதலீடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய தேயிலைச் சிறுதோட்ட உரிமையாளர்கள் மறுநடுகை மற்றும் இடைநடுகைக்காக ஏக்கர் ஒன்றுக்கு 1 மில்லியன் ரூபா வரையிலும், அல்லது நீர்ப்பாசன அமைப்புடன்கூடிய மறுநடுகை மற்றும் இடைநடுகைக்காக ஏக்கர் ஒன்றுக்கு 1.5 மில்லியன் ரூபா வரையிலும் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். தேயிலைப் பயிர்ச்செய்கை திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் இக்கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் பசுந்தேயிலை விநியோகங்களின் அடிப்படையில் கழிக்கப்படும் தொகைகள் மூலம் கடனுக்கான மீள்செலுத்தல்கள் செய்யப்படும் என்பதுடன், சம்பந்தப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையின் Corporate guarantee இதற்கான பிணையாகச் தொழிற்படும்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான 'Top 1000 World Banks' தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100மூ கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட 270 இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































