Nov 4, 2026 - 09:13 AM

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிரிஷ்ணா காயத்திலிருந்து முழுமையாக மீண்டு, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு உடற்தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ Centre of Excellence (CoE) மருத்துவக் குழு நடத்திய உடற்தகுதி சோதனைகளில் அவர் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது பிரசித் பிரசித் கிரிஷ்ணாவுக்கு தொடை தசை காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலகினார்.
தற்போது உடற்தகுதி பெற்றுள்ளதால், நியூசிலாந்துக்கு விரைவில் பயணம் மேற்கொண்டு, நவம்பர் 7ஆம் திகதி தொடங்கவுள்ள இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 19ஆம் திகதி தொடங்கவுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிரசித் கிரிஷ்ணா தயாராகி வருகிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தகுதி வாய்ப்பில் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடரில், அவரது வருகை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































