Nov 17, 2026 - 04:51 PM

மத்திய குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட பெட்ரோலிய தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

































