Nov 10, 2026 - 05:29 PM

சரசவி உயன மற்றும் பேராதனைக்கும் இடையில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்காக புகையிரதப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கண்டி மாநகர பிரதேசத்தை உள்ளடக்கியவாறு விரிவான நகரை அண்டிய புகையிரத வலையமைப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இக்கருத்திட்டத்தின் விடயதானத்திற்கு பேராதனைக்குக் குறுக்கே கடுகன்னாவ தொடக்கம் கம்பளை வரையான பிரதான புகையிரத வீதியை இரட்டைப் பாதையாக மாற்றுதல் மற்றும் பேராதனை தொடக்கம் கட்டுகஸ்தோட்டை மாத்தளை புகையிரத வீதியை இரட்டைப் பாதையாக மாற்றுவதும் உள்ளடங்குகின்றது.
திட்டமிடப்பட்டுள்ள இரட்டைப் புகையிரதப் பாதையை பூர்த்தி செய்தல், தற்போது நிலவுகின்ற ஒற்றைப் புகையிரதப் பாதையால் ஏற்பட்டுள்ள இயலளவுத் தடைகளை நீக்குதல் மற்றும் புகையிரத வலையமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் தொடர்புகளை அதிகரிப்பதற்கான இக்கருத்திட்டத்தின் கீழ் படிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, டித்வா புயல் அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள புகையிரத உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு மாத்தளை புகையிரதப் பாதையை தேசிய புகையிரத வலையமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கு இயலுமாகும் வகையில் சரசவி உயன மற்றும் பேராதனைக்கும் இடையில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்காக புகையிரதப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

































