Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

    Mobitel Inner 1278

    இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் கடந்த 01 ஆம் திகதி நடந்த முதல் பிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.


    கடந்த மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான இரானி கிண்ண போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடியபோது அவருக்கு விலா எலும்பில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார்.


    கடந்த அக்டோபர் 23 ஆம் திகதி முதல் பெங்களூரு மையத்தில் பயிற்சி பெற்று வரும் பந்த், தற்போது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் முழுமையான உடல் தகுதியை எட்டியுள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக பிசிசிஐ மருத்துவக் குழுவினர் வரும் நாட்களில் இரண்டாவது பிட்னஸ் சோதனைக்கு ஏற்பாடு செய்யவுள்ளனர்.


    இந்த இரண்டாவது சோதனையில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    இரண்டாவது பிட்னஸ் சோதனையில் பந்த் வெற்றி பெற்றால், நவம்பர் 7 முதல் 10 வரை லிங்கன் நகரில் நடைபெறும் இந்தியா 'ஏ' மற்றும் நியூசிலாந்து 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 ஆவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.


    முன்னதாக நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும் பந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு மாற்றாக ஜார்க்கண்ட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் குஷாக்ரா அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஒருவேளை ரிஷப் பந்த் இரண்டாவது பிட்னஸ் சோதனையிலும் தோல்வியடைந்தால், நியூசிலாந்துக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் அவரது பங்கேற்பு கேள்விக்குறியாகிவிடும்.