Nov 17, 2026 - 05:39 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

கார்த்திகை முதலாம் நாளான இன்று (17) பதினெட்டாம்படி கருப்புசாமி என்று அழைக்கப்படுகின்ற ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணியும் வைபவம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், உரும்பிராய் சாட்டுப் பத்தூர் சபரிபீடம் என அழைக்கப்படும் கருணைமிகு சிவதர்ம சாஸ்த்தா திருக்கோவிலில் மாலை அணியும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஐயப்பனுக்கான பாடல்கள் இசைக்கப்பட்டு ஐயப்பனுக்கு காணிக்கை செலுத்தப்பட்ட மாலையினை பக்கதர்கள் குருக்களின் கைகளால் அணிந்து கொண்டனர்.
இதன்போது சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும் நிகழ்வு பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஐயப்ப பக்தர்கள் இன்றிலிருந்து தங்களின் 41 நாள் மண்டல விரதத்தைத் தொடங்குகின்றனர்.
ஐயப்பனை மனதில் நினைத்து, சரண கோஷங்கள் முழங்க குருசாமியின் வழிகாட்டுதலுடன் பக்தர்கள், பக்தைகள் மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்தனர்.

































