Nov 17, 2026 - 05:56 PM

சுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று (17) தொடங்கியது.
இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்று 23 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இன்றைய தினம் துடுப்பாட்டத்தில் தையப் ஆரிஃப் 46 ஓட்டங்களுடனும் மொஹமட் தாஹா மற்றும் பாபர் அஸாம் தலா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஆட்டமிழக்காமல் களத்தில் அஸான் அவாய்ஸ் 47 ஓட்டங்களுடனும், சகிப் கான் 2 ஓட்டங்களுடனும் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் பிரபாத் ஜயசூரிய தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
அணியின் தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 32 ஓட்டங்களையும், சொனால் தினுஷ 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சு தரப்பில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமத் அப்பாஸ், ரசாவுல்லா மற்றும் ஆமிர் ஜமால் தலா 3 விக்கெட்டுகளையும், சகிப் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

































