Nov 17, 2026 - 06:05 PM

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓவர் வேகத்தைப் பராமரித்த காரணத்துக்காக இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கடுமையான அபராதங்களை விதித்துள்ளது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் 15 ஓவர்கள் பின்தங்கியதற்காக இலங்கை அணிக்கு 15 புள்ளிகள் குறைக்கப்பட்டன.
இதனால், உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 7ஆவது இடத்திலிருந்து 8வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளதுடன், அதன் புள்ளி சதவீதம் 33.33 இல் இருந்து 15.47 ஆகக் குறைந்துள்ளது.
அதேநேரம் ல், 5 ஓவர்கள் பின்தங்கிய பாகிஸ்தான் அணிக்கு 5 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3.33 சதவீதத்துடன் 9 ஆவது (கடைசி) இடத்திலுள்ளது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்திலும், தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
புள்ளிகள் குறைப்புடன் சேர்த்து, ஐ.சி.சி நடத்தை விதைகளின்படி ஒவ்வொரு குறைந்த ஓவருக்கும் தலா 5 சதவீதம் வீதம் (அதிகபட்சம் 50%) போட்டி ஊதியத்திலிருந்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கு 50 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 25 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டை அணித் தலைவர்களான பாபர் அசாம் மற்றும் குசல் மெண்டிஸ் ஏற்றுக்கொண்டதை அடுத்து, முறையான விசாரணையின்றி இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் (Draw) முடிவடைந்த நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

































