Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

அஞ்சலி

அஞ்சலி

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

    Mobitel Inner 1278

    மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ராணி மற்றும் குழந்தை நட்சத்திரம் லிதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள "அப்பாகுட்டி" திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 20 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.


    இந்த விழாவில், விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் மறைவுக்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளாகப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி முதல்முறையாகக் கலந்துகொண்டு, மேடையில் கண்ணீருடன் பேசிய உருக்கமான விஷயங்கள் அரங்கையே உரையவைத்துள்ளன.


    விழாவில் பேசிய பாத்திமா, விஜய் ஆண்டனி இதுவரை வெளியில் சொல்லாத ஒரு ரகசியத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். "எங்களது மூத்த மகள் மீரா இறப்பதற்கு முன்பு அவள் கல்லூரிக்குச் செல்வதற்காக 50 இற்கும் மேற்பட்ட செருப்புகள் மற்றும் ஷூக்களை வாங்கி வைத்திருந்தோம்.


    ஆனால், அவளது மறைவின்போது செருப்பு இல்லாமல் அவளை அனுப்பினோம். அதைப்பார்த்த விஜய் ஆண்டனி, அன்று முதல் 'நான் இனி வாழ்க்கை முழுவதும் செருப்பு போடாமல் தான் இருப்பேன்' என்று முடிவெடுத்தார். இசை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வேறு வழியில்லாமல் அணிவார், முடிந்ததும் கழற்றிவிடுவார். வெளிநாடுகளில் கூட அவர் செருப்பு அணியாமல் தான் நடக்கிறார்" என்று கூறினார்.


    விஜய் ஆண்டனி தற்போது அணிந்திருக்கும் கைக்கடிகாரம் குறித்துப் பேசிய அவர்,


    "அவர் இப்போது கட்டியிருப்பது மீரா பயன்படுத்திய 3,900 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் ஆகும். அவர் வைத்திருந்த விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு மீராவின் நினைவாக இதனை அணிந்துள்ளார்.


    நான் அவரிடம், 'மாமா நீங்கள் முன்பு கட்டியிருந்த வாட்ச் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நிலையைக் காட்டும்' என்று கூறினேன். அதற்கு அவர், 'இந்த வாட்ச் மீராவுடையது, அவளே என் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வாள்' என்று கூறினார்" என பாத்திமா நெகிழ்ந்தார்.


    மீரா பயன்படுத்திய அறை மற்றும் அவளது கம்மல் குறித்துப் பேசிய பாத்திமா, "மீராகுட்டி ஒரே ஒரு கம்மல்தான் அணிந்திருப்பாள். அவளை அனுப்பும்போது கூட அந்தக் கம்மலைக் கழற்றிவிட்டுதான் அனுப்பினேன்.


    அவள் பயன்படுத்திய அறை இன்னும் அவளது நினைவாக அப்படியே இருக்கிறது. விரைவில் அவளே சொல்வது போல அந்த அறையை எங்கள் அறையாக மாற்றிக்கொள்ளப் போகிறோம்" என்றார்.


    விஜய் ஆண்டனியின் மற்றொரு பக்கத்தைப் பகிர்ந்த பாத்திமா, "விஜய் ஆண்டனிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதை அவர் வெளியில் காட்ட மாட்டார், வீட்டில் மட்டும்தான் காட்டுவார். வீட்டில் அவர் காட்டும் நகைச்சுவையால் தொலைபேசி உடையும், டி.வி உடையும் (சிரிப்புடன்). அதை இப்போது வாங்க காசு இல்லை, இந்த 'அப்பாகுட்டி' படம் ஓடினால் தான் வாங்க வேண்டும். என் மகளையும் என்னையும் அவர்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.


    "5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் பேசுவதால் ஒரு குடும்பமாக உணர்கிறேன். மீரா நீ எங்கிருந்தாலும் இந்த ஷோவை வழிநடத்து" என்று பாத்திமா கண்கலங்கியபடி பேசி முடித்தார். பாத்திமாவின் இந்த உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.