Nov 11, 2026 - 02:10 PM

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது 14ஆவது டெஸ்ட் சதத்தை தனஞ்சய டி சில்வா பதிவு செய்துள்ளார்.
148 பந்துகளில் அவர் இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தபோது, இலங்கை அணி 69.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 249 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதற்கமைய, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையான 434/9 ஐ விட இலங்கை அணி இன்னும் 185 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.
தனஞ்சயவுடன் ஆடுகளத்தில் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 31 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
































