Nov 11, 2026 - 12:18 PM

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, தனது முதன்மையான நிலைபேறான அபிவிருத்தி முயற்சியின் முக்கிய மைல்கல்லாக, 300ஆவது ‘பஹசர’ நூலகத்தை 2026 நவம்பர் 10ஆம் திகதி பிலியந்தலையிலுள்ள கொ/ தர்மராஜ மகா வித்தியாலயத்தில் திறந்து வைத்துள்ளது.
300 நூலகங்கள் என்ற இலக்கை எட்டியுள்ளமை, இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கான கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும் வங்கி நீண்டகாலமாக முன்னெடுத்து வரும் முயற்சியில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். 2013ஆம் ஆண்டு, அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் முதலாவது நூலகத் திறப்புடன் ஆரம்பிக்கப்பட்ட ‘பஹசர’ திட்டம், படிப்படியாக நாட்டின் 25 மாவட்டங்களிலும் விரிவடைந்துள்ளது. இதன் மூலம் பாடசாலைகளிற்கு அத்தியாவசிய கற்றல் வளங்களை வழங்குவதுடன், மாணவர்கள் ஆராய்ந்து, கற்றுத் தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான உகந்த சூழலையும் உருவாக்கி வருகின்றது.
புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட நூலகம், புத்தகங்கள் மற்றும் திறன் பலகை வசதிகளை கொண்டிருப்பதால் மாணவர்கள் தமது கல்விப் பயணத்திற்கு உதவும் நவீன கற்றல் உபகரணங்கள் மற்றும் டிஜிட்டல் வளங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
300ஆவது நூலகத்தின் திறப்பை முன்னிட்டு, பாடசாலை சமூகத்தினரின் பங்கேற்புடன் சிறப்பான ‘பஹசர வாரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கரப்பந்தாட்டப் போட்டிகள், சித்திரப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் மாணவர்களின் அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கிலான நிதிசார் அறிவூட்டல் அமர்வுகளும் இடம்பெற்றன.
இந்த மைல்கல்லுடன் இணைந்ததாக, செலான் வங்கி தனது நாடளாவிய பணியாளர் வலையமைப்பின் பங்களிப்புடன் விசேட புத்தக நன்கொடைத் திட்டமொன்றையும் முன்னெடுத்தது. நாடு முழுவதிலுமுள்ள வங்கிக் கிளைகள் மற்றும் நிறுவனப் பிரிவுகளை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பணியாளர்கள் புதிய புத்தகங்களையும், நல்ல நிலையில் உள்ள ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட புத்தகங்களையும் ஆர்வத்துடன் சேகரித்தனர். இப்புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் தேவையுள்ள பஹசர நூலகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
இத்திறப்பு விழாவில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரமேஷ் ஜயசேகர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவருடன் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி திரு.ரணில் அந்தோனி திஸாநாயக்க மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவக் குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர். அத்துடன், பிலியந்தலை கொ/ தர்மராஜ மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. S. L. A. P. சமரவிக்ரம, பிலியந்தலை வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி. குமுது ஹேமமாலி, பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த மைல்கல் குறித்து கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “நாம் 300ஆவது ‘பஹசர’ நூலக இலக்கை எட்டியுள்ளமை செலான் வங்கிக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தருணமாகும். 2013ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் எமது முதலாவது நூலகத்தைத் திறந்து வைத்தது முதல், நாடெங்கிலும் வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களின் அறிவை மேம்படுத்துவது என்ற ஒரே சமூக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எமது நிலைபேறான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் பயணத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட கல்வி அமைச்சு, வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் 300 பஹசர பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 300 நூலகங்கள் என்ற இலக்கை எட்டியுள்ள தருணத்தை நாம் பெருமையுடன் கொண்டாடும் அதேவேளை, எமது சிறுவர்களினதும் அவர்களது சமூகங்களினதும் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் நீடித்த, நேர்மறையான மாற்றமே எமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வெகுமதியாகும்.” எனத் தெரிவித்தார்.
‘பஹசர’ திட்டமானது, கல்வியின் ஊடாக தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான செலான் வங்கியின் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நவீன நூலக வசதிகள், புத்தகங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளைப் பாடசாலைகளுக்கு வழங்குவதன் ஊடாக எதிர்காலத் தலைமுறையினரின் அறிவு, விழுமியங்கள் மற்றும் அபிலாஷைகளில் வங்கி தொடர்ந்தும் முதலீடு செய்து வருகின்றது. இதன் மூலம், இலங்கைக்கு ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கின்றது.
































