Nov 11, 2026 - 12:03 PM

சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான Fitch Ratings, 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கொமர்ஷல் வங்கியின் தேசிய நீண்டகால கடன் தரப்படுத்தலை 'AA-(lka)' இலிருந்து 'AA(lka)' ஆக தரமுயர்த்தியுள்ளது. இது இலங்கையின் முதன்மைத் தனியார் துறை கடன் வழங்கும் வங்கி எனும் வங்கியின் வலுவான நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதுடன், அதன் நிலையான நிதிப் பலத்தையும் வெளிப்படுத்துகின்றது.
'AA(lka)' கடன் தரப்படுத்தலானது, நாட்டின் ஏனைய கடன் வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர் மட்டத்திலான கடன் தரம் மற்றும் மிகக் குறைந்தளவிலான இடர் என்பவற்றைச் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், இது முதலீட்டாளர்கள், வைப்பாளர்கள், பெறுநிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச வங்கிப் பங்காளர்களுக்கு வங்கியின் வலுவான மூலதனப் போதுமை (Capital Adequacy), திரவத்தன்மை (Liquidity) மற்றும் சொத்துத் தரம் (Asset Quality) ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான சான்றாகவும் அமைகின்றது.
Fitch அமைப்பின் மதிப்பீடானது, இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி என்ற கொமர்ஷல் வங்கியின் நீண்டகால நிலைப்பாடு, வணிக உருவாக்கம் மற்றும் நிதியீட்டல் ஆகியவற்றில் அது கொண்டுள்ள நீடித்த நன்மைகள், மற்றும் ஏனைய பெரிய தனியார் துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் உகந்தளவிலான நிதிச் செலவு என்பவற்றை அங்கீகரித்துள்ளது. அத்துடன், வங்கியின் சொத்துத் தரம், இலாபத்தன்மை மற்றும் நிகர மதிப்புக்குறைந்த கடன்களுக்கான (Net Impaired Loans) மூலதனப் பாதுகாப்பு ஆகியவை தரப்படுத்தப்பட்ட உள்நாட்டு வங்கிகளின் எல்லைக்குள் பொதுவாக வலுவான மட்டங்களில் நிலைத்திருப்பதாக Fitch அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தரமுயர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் அவர்கள், 'இத்தகைய தரமுயர்த்தலானது எமது பங்குதாரர்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்' எனக் குறிப்பிட்டார். 'எமது வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில், அவர்களின் முதலீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பதில் வங்கியின் ஸ்திரத்தன்மைக்கும் நிதிப் பலத்திற்கும் இந்தத் தரமுயர்வு ஒரு கூடுதல் சான்றாக அமைகின்றது. நிதியீட்டலை எதிர்பார்க்கும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு, போட்டியாற்றல்மிக்க நிதித் தீர்வுகளை வழங்கவும், அவர்களின் பன்முகப்பட்ட வளர்ச்சி இலக்குகளுக்கு ஆதரவளிக்கவும் வங்கியின் வலுவான நிறுவனக் கடன் தகுதியும் நிதியீட்டல் நன்மைகளும் உறுதுணையாக அமைகின்றன' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தரமுயர்த்தல் குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க அவர்கள் கூறுகையில்: 'இந்தக் கடன் தரமுயர்த்தலானது கொமர்ஷல் வங்கியின் நிதி மீள்திறன், ஒழுக்கமான இடர் முகாமைத்துவம் மற்றும் நிலையான ஆற்றல் ஆகியவற்றிற்கான வலுவான அங்கீகாரமாகும். இது எமது வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேசப் பங்காளர்கள் எம்மிடம் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன், இலங்கையின் வணிகங்கள், குடும்பங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் எமது திறனையும் பலப்படுத்துகிறது' எனக் குறிப்பிட்டார்.
இந்த வலுவான கடன் சுயவிவரமானது, சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்லை தாண்டிய வங்கிச் சேவைகள், வர்த்தக நிதியீட்டம் மற்றும் மூலதனத்தை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருதல் ஆகிய சேவைகளின் தொடர்ச்சியையும் வினைத்திறனையும் ஆதரித்து, கொமர்ஷல் வங்கியின் சர்வதேசத் தொடர்பாளர் வங்கி உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதாக வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான 'Top 1000 World Banks' தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100மூ கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட 270 இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































