Nov 18, 2026 - 09:40 PM

அரச முதலீடுகள் மற்றும் 'டித்வா' (Ditwa) சூறாவளிக்குப் பிந்தைய சீரமைப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் அரசாங்கமானது நிதி ஒழுக்கம் மற்றும் அரச கடனைக் குறைக்கும் இலக்குகளை 2027ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச 'ஃபிட்ச் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டில் இலங்கையின் நிதி இலக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் விஞ்சப்பட்டு வெளிப்படுத்தப்பட்ட வெற்றியும், கடன் சுமையைக் குறைப்பதற்கு வழங்கப்பட்ட முன்னுரிமையும் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் கடன் தரநிலையை 'CCC+' இலிருந்து 'B-' ஆக உயர்த்த ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நடவடிக்கை எடுத்தது.
2026ஆம் ஆண்டில் அரச வருமானம் வளர்ச்சியடைந்ததன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% முதன்மை கணக்கில் உபரி பதிவாகியுள்ளது. இது முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 2.5% இலக்கை குறிப்பிடத்தக்க அளவில் தாண்டியமையாகும்.
2027ஆம் ஆண்டிற்கான இந்த முதன்மை உபரி இலக்கு 2.3% ஆகவும், வரவு செலவு பற்றாக்குறை 4.5% ஆகவும் விரிவடையும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும், அத்தகுநிலையும் நாட்டின் கடன் தொகையைக் குறைக்கும் எதிர்கால பாதைக்கு இணக்கமானது என ஃபிட்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

































