Nov 19, 2026 - 11:16 AM

சீன் திரைப்படம் 13 நாட்கள் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் சீன். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நஸ்ரியா நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் ரொமான்டிக் பாயாக வலம் வரும் நஸ்லன் இப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.
இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சூர்யா, சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார். இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், ஒரே ஆண்டில் 200 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்த மூன்று திரைப்படங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சீன் திரைப்படம் உலகளவில் 13 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 13 நாட்களில் இப்படம் உலகளவில் 260+ கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

































