Nov 22, 2026 - 10:50 AM

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி நேற்று (21)மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமானது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் கா.சோ. சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்றியதுடன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரையாற்றினார்.
இதேவேளை, முனைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்திய வணிகர்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.ஆர். தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பங்களிப்பில் நூறு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
































