Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
புத்தளத்தில் 6,615 பேர் பாதிப்பு!

Nov 26, 2024 - 07:17 PM

புத்தளத்தில் 6,615 பேர் பாதிப்பு!
Mobitel Inner 1278

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம மற்றும் வென்னப்புவ ஆகிய 9 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 55 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 11 கிராம சேவகர் பிரிவுகளில் 685 குடும்பங்களைச் சேர்ந்த 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் 361 குடும்பங்களைச் சேர்ந்த 1,396 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  1 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த இருவரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  5 கிராம சேவகர் பிரிவுகளில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 661 குடும்பங்களைச் சேர்ந்த 2,179 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை , வெள்ள அனர்த்தத்தினால் மாதம்பை, வன்னாத்தவில்லு மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடுகளும், நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று வீடுகளும் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

மாத்திரமின்றி, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்றும் புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
08
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

Sep 22, 2026 - 05:12 PM


காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278