Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
“ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம் திறப்பு

Sep 22, 2026 - 06:38 PM

“ViYASA” தேசிய வணிக வசதியளித்தல் மையம் திறப்பு
Mobitel Inner 1278

முதலீடுகள் மற்றும் கைத்தொழிற்துறை சார்ந்த அரச நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை தடைகளை நீக்கி, அந்தச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன், ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC), கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று (22) முற்பகல் திறக்கப்பட்டது.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, கைத்தொழிற்துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தகமொன்றைத் தொடங்கும்போதும் அதனைப் பராமரிக்கும்போதும் அரச பொறிமுறையுடன் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் இம்மையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.


மேற்படி, “ViYASA ”  தேசிய வணிக வசதியளித்தல் மையம் (NBFC) கொழும்பு 07, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை இலக்கம் C-80 கட்டடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட  செயற்படுகிறார்.


இதனுடன் இணைந்ததாக https://nbfc.presidentsoffice.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.


இங்கு கருத்துத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி,


இந்த மையத்தைத் திறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது எங்களுக்குப் பெரிய தைரியமாகும். குறிப்பாக இவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பிப்பதை வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் பல 
அரசாங்கங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தனர். நாங்கள் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சுப் பணிகளை ஆரம்பித்த நாள் தொடக்கம் 
அனைத்து வர்த்தக சம்மேளனங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் கோரிக்கையாக இந்த விடயம் மாறியிருந்தது.


நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே இவ்வாறானதொரு நிறுவனம் குறித்த திட்டமிடல்களுடன் தான் செயற்பட்டோம். கைத்தொழில் அமைச்சு தனித்து இயங்கும் நிறுவனமொன்று அல்ல. நாங்கள் அனைத்து அமைச்சுகளுடனும் நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுகிறோம். முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளைத் உடனடியாக வழங்க முடியாமை நாங்கள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையாகும். எமது அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாகவும்,   நியாயமாக நீதி நிலைநாட்டப்படுவதன் காரணமாகவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு முதலீடுகளைக் கொண்டுவந்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இவர்கள் அனைவரும் முகங்கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினை காணிப் பிரச்சினையாகும். கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வேகத்திற்கு காணிகள் தொடர்பான விடயங்களை சீர் செய்து கொடுப்பதற்கான நிலையமொன்று இருக்கவில்லை. எமது பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன. சில காணிகள் பயன்படுத்தாமல் இருந்தாலும், அவற்றுக்கு வழக்குகள் உள்ளன. இவைதான் பிரச்சினைகள். முதலீட்டாளர்கள் காணிகள் நிவர்த்தி செய்யப்படும் வரை காத்திருப்பதில்லை. அவர்கள் மாற்று இடங்களுக்குச் செல்கின்றனர். அடுத்த பிரச்சினை நிதி வசதிகளை வழங்குவதாகும். அங்கும் பிரச்சினைகள் உள்ளன. அடுத்த பிரதான பிரச்சினை சுங்கம் தொடர்பான  செயற்பாடுகளை எளிமைப்படுத்துவதாகும். தற்போது இந்த முதலீட்டாளர்களும், தொழில்முயற்சியாளர்களும் வரிகள் பற்றிப் கேள்வி எழுப்புவதில்லை. அவற்றைச் செலுத்தத் தயாராக உள்ளனர். அவற்றுக்கான பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது அவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இருப்பது இந்தச் செயற்பாடுகளை எளிமைப்படுத்துவதிலேயாகும். அதற்கு இந்த புதிய நிறுவனம் மிகப்பெரிய பலமாக அமையும்.
காலம் காலமாக அமைச்சர்கள் வசித்து வந்த இடங்களை இதுபோன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்துவது பயனுள்ள செயலாகும். இதனை கைத்தொழில் அமைச்சுக்குரிய துணை நிறுவனமாகவே நாங்கள் கருதுகிறோம். இது ஜனாதிபதியின் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் சுயாதீனமாக இயங்கும் நிறுவனமாகும். சிலர் எதிர்வரும் ஆண்டில் எமக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணி குறையும் என நினைக்கின்றனர். அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டோம். பல துறைகளின் கீழ் புதிய முதலீடுகளை ஈர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கனிம வளத்துறை புதிய முதலீடுகள் அதிகம் உள்ள துறையாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தேசிய கனிம வளக் கொள்கையை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். அத்துடன் இலங்கையை சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் ஆபரண மையமாகக் கட்டமைப்பதற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
08
172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

172ஆவது வருடாந்திர பொதுக்கூட்டத்தில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் புதிய தலைவர், இத்தொழிற்துறையின் மறுமலர்ச்சிக்கான 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்த

Sep 22, 2026 - 05:12 PM


காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278