Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
மாமாவை கொலை செய்த மருமகன்!

Dec 31, 2024 - 04:20 PM

மாமாவை கொலை செய்த மருமகன்!
Mobitel Inner 1278

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை கிலவமடுச்சேனை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) கூரிய அயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது பெரும் கைகலப்பாக மாறியதுடன், அதனை சமரசத்திற்கு கொண்டு வர முயற்சி செய்த மாமாவே, மருமகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

மதுரங்குளி - கிலவமடுச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தொம்பகஹ பத்திரனகே டைட்டஸ் ரோஹன் பீரிஸ் ( வயது 56) எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, தனது சிறிய மகனின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற மைத்தனர், அங்கு கடும் வாய்தர்க்கத்திலும் , மோதிலிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்போது, தனது மகனுக்கும், மருமகனுக்கும் இடையே இடம்பெற்றுவந்த சண்டையை பிரிக்கமுற்பட்ட போது, மருமகன் மறைத்து வைத்திருந்த  கூரிய ஆயுதத்தினால் தனது மகனை குத்திக் காயப்படுத்த முயற்சி செய்துள்ளார் எனவும், அதனை தடுக்க முற்பட்ட மாமா மீது மருமகன் கூரிய ஆயுதத்தினால் குத்திக் காயப்படுத்தியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இதன்போது, படுகாயமடைந்த மாமாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278