Header Logo

பல்சுவை
மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடை

Feb 8, 2025 - 03:08 PM -

0

மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடை

இந்தியாவின் கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாவுக்கு பெயர் போன ஊராகும். இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் அணைகளை கண்டுகளிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருப்பர்.

 

வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து விட்டு வால்பாறைக்கு செல்வார்கள்.

 

அங்குள்ள தேயிலை தோட்டங்களை பார்த்து விட்டு, அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.

 

கடந்த சில நாட்களுக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியான மைக்கேல் (வயது73), என்பவர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார்.

 

அவர் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் வால்பாறை நோக்கி சுற்றுலாவுக்காக பயணித்து கொண்டிருந்தார்.

 

வாட்டர் பால்ஸ் அருகே சென்றபோது காட்டு யானை ஒன்று வீதியை மறித்து நின்றிருந்தது. ஆனால், மைக்கேல் யானை நிற்பதையும் தாண்டி, அந்த பகுதியை கடந்து செல்ல முயன்றார்.

 

அப்போது அந்த யானை, மைக்கேலை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

 

வால்பாறை மலைப்பாதையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

 

குறிப்பாக கவியருவி, நவமலை, வாய்க்கால் மேடு, 1 ஆவது கொண்டை ஊசி வளைவு, 14 ஆவது கொண்டை ஊசி வளைவு, அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதை அடுத்து, பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை கள இயக்குனர் அறிவுறுத்தலின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறையில் வசிக்கும் மக்களுக்கும் பொருந்தும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

title