Header Logo
SLIC
உலகம்
கடும் எரிபொருள் நெருக்கடி: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு!

Mar 15, 2026 - 08:20 AM

கடும் எரிபொருள் நெருக்கடி: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% வரை குறைப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  தலைமையிலான அரசு அதிரடியான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரமுடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் 5% முதல் 30% வரை குறைப்பு செய்வதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோரின் அடுத்த இரண்டு மாதங்களுக்கான சம்பளம் முழுமையாகப் பொது நல நிதிக்காகப் பயன்படுத்தப்படும்.

அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு 60% அரசு வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உத்தியோகபூர்வ பயணங்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத பயணங்கள் எனில், அவர்கள் 'எகனமி' (Economy Class) வகுப்பிலேயே பயணிக்க வேண்டும்.

எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் காரணமாக உலகளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பாகிஸ்தான் இந்த நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் சேமிக்கப்படும் நிதி அனைத்தும் பொதுமக்களின் நிவாரணப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278