Header Logo

கிழக்கு
54 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதி

Mar 12, 2025 - 09:18 AM -

0

54 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (11) காலை மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரடியனாறு மகா வித்தியாலத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் காலை உணவு வாங்கி உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகவீனத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 32 ஆண்கள், 22 பெண்கள் அடங்களாக 54 மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கரயனாறு பொலிஸார் மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

--

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!