Mar 18, 2025 - 06:50 PM -
0
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள "பொடி லெசி" என்று அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவுக்காக சட்ட ஆலோசனை மற்றும் பிணை பெற இரண்டு சட்டத்தரணிகள் இந்தியா புறப்பட்டுள்ளனர்.
பேஷல கங்கோடராச்சி மற்றும் நவீன் ஜயமன்ன ஆகிய இரண்டு சட்டத்தரணிகளும் இன்று (18) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பைக்கு புறப்பட்டனர்.
இந்த வழக்கு இந்தியாவின் மும்பையில் உள்ள தானே நீதிமன்றத்தில் வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.