பல்சுவை
கடும் விரக்தியடைந்த பயனர்கள்

Mar 21, 2025 - 02:39 PM -

0

கடும் விரக்தியடைந்த பயனர்கள்

உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பிரபலமான சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இது பயனர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரவும், பிற பயனர்களுடன் தொடர்புகொள்ளவும் பயன்படுகிறது. 

 

கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம், தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவையை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.

 

உலகின் மற்ற நாடுகளை விட அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 229 மில்லியன் பயனர்கள் இன்ஸ்டா தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இது உலகளவில் மிகப்பெரிய பயனர் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 

இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று மாலை இன்ஸ்டாகிராம் சிறுது நேரம் தடைப்பட்டதாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான டவுன்டிடெக்டர் (Downdetector.com) தெரிவித்துள்ளது. தடைப்பட்டது குறித்து 19,431 இற்க்கும் மேற்பட்ட மக்கள் புகாரளித்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் டவுன் டிடெக்டர் வலைதளம் கூறியது.

Comments
0

MOST READ
01
02
03
04
05