Header Logo

செய்திகள்
இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்ட ஈரானின் அதிநவீன ஏவுகணை!

Mar 6, 2026 - 04:37 PM -

0

இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்ட ஈரானின் அதிநவீன ஏவுகணை!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே தயாரித்த 'கொரம்ஷார்-4' (Khorramshahr-4) கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் (Ballistic Missile) பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. 

ஈரானால் தயாரிக்கப்பட்ட கொரம்ஷார் ஏவுகணையானது ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையாகக் கருதப்படுகிறது. 

13 மீற்றர் நீளம் கொண்ட இது, தோராயமாக ஒரு பேருந்தின் நீளத்தைக் கொண்டது. 

அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை, 1.5 தொன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 

2017ஆம் ஆண்டு முதல் ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த போதிலும், இது 2023ஆம் ஆண்டிலேயே அவர்களால் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title