Header Logo

செய்திகள்
ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு

Mar 4, 2026 - 07:06 PM -

0

ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்  ஹெக்செத்  தெரிவித்துள்ளார்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின் பெயரை அவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதேவேளை, 'IRIS Dena' என அழைக்கப்படும் ஈரானிய போர்க்கப்பல் ஒன்று இன்று (04) அதிகாலை இலங்கைக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

அதிகாலை வேளையில் குறித்த கப்பலில் இருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைக்கு அமைய, இலங்கை கடற்படையினர் உடனடியாகச் செயற்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

விபத்து நிகழும் போது அந்தக் கப்பலில் சுமார் 180 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 32 பேர் இலங்கை கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எவ்வாறாயினும், மூழ்கிய கப்பலில் இருந்த சுமார் 140 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவரவில்லை எனவும், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title

தொடர்புடைய செய்திகள்
காலி  துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து

காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து

காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது

Mar 04, 2026 - 11:02 AM

 ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர்

Mar 04, 2026 - 11:57 AM

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு

காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Mar 04, 2026 - 01:03 PM

மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினருக்கு கராப்பிட்டியவில் சிகிச்சை

மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படையினருக்கு கராப்பிட்டியவில் சிகிச்சை

கடற்படையினரின் மீட்பு நடவடிக்கையின் மூலம் காப்பாற்றப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்தவர்களுக்கு தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Mar 04, 2026 - 04:02 PM