Mar 22, 2025 - 05:37 PM -
0
ஆசிரியை ஒருவர் ஆபாச இணையத்தளம் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றியுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை எலேனா மராகா(வயது 29). கல்வி அறிவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், சுமார் 5 ஆண்டுகள் கத்தோலிக்க முன்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், ஆபாச இணையதளம் ஒன்றில் ஆசிரியை எலேனா மராகா பகுதி நேர மாடலாக இருந்தது அவரது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சிலருக்கு தெரியவந்துள்ளது.
அவர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், ஆசிரியை எலேனா மராகா தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து எலேனா மராகா கூறுகையில், "பள்ளியில் எனக்கு கிடைத்த சம்பளமான 1,200 யூரோ, எனக்கு போதுமானதாக இல்லை. எனவே பகுதி நேரமாக வேறு வேலை தேடி வந்தேன். எனது உடல் குறித்து நான் பெருமை கொள்கிறேன். அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன்.
குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது எனக்கு பிடிக்கும். அது எனது விருப்பம். ஆனால் இணையதளம் மூலம் நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஆர்வம் காரணமாக ஆபாச இணையதளம் ஒன்றில் கணக்கு தொடங்கி, அதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கினேன்.
எனது ஒரு மாத சம்பளத்தை விட அதிக பணத்தை ஒரே நாளில் என்னால் சம்பாதிக்க முடிந்தது. நான் யாரையும் துன்புறுத்தாமல், பகுதி நேரமாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எலேனாவை இடைநீக்கம் செய்த முடிவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.
ஆசிரியை என்பவர் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
அதே சமயம், எலேனா ஒரு ஆசிரியையாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் என்ன செய்கிறார் என்பதை கண்காணிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.