செய்திகள்
மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

Mar 26, 2025 - 09:32 AM -

0

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார். 

மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆண்டுக்கு இரண்டு முறை அதிகபட்ச விலையை மாற்றியமைக்க அதிகாரம் பெற்றுள்ளதுடன், டொலரின் பெறுமதி ஏற்ற இறக்கமாக இருந்தால், பொது மக்களின் நலனுக்காக எந்த நேரத்திலும் இந்த அதிகபட்ச விலைகளை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05