Mar 28, 2025 - 03:31 AM -
0
பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (27) மாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பதுரலிய பொலிஸ் பிரிவின் கெலின்கந்த வீதியில் உள்ள பாழடைந்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த இடத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.