செய்திகள்
கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில் தனி தீர்மானம்

Apr 2, 2025 - 11:41 AM -

0

கச்சத்தீவை மீட்க கோரி தமிழக சட்டசபையில் தனி தீர்மானம்

கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெறுவதற்கான அரசின் தனித் தீர்மானத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் சமர்ப்பித்துள்ளார். 

தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களை போக்கிடவும் கச்சத் தீவை மீண்டும் பெறுவதே நிரந்தர தீர்வாக அமையும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இலங்கை அரசுடன் பேசி, அந்நாட்டு சிறையில் வாடும் நமது மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டு கொண்டுவர வேண்டுமென்றும் இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாக அந்த தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05